இணையத்தையே தெறிக்கவிடும் அதர்வாவின் ட்ரிக்கர் ட்ரைலர் – மூன்று மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை!!!

0

அதர்வா நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் ட்ரிக்கர் திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. மேலும், ட்ரைலர் வெளியாகி சில மணி நேரத்திலேயே பல மில்லியன்கணக்கான பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

ட்ரிக்கர் ட்ரைலர்

ப்ரோமோத் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுருதி நல்லாப்பா தயாரிப்பில் அதர்வா தற்போது ட்ரிக்கர் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். 100 திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு அதர்வா மற்றும் ஆண்டனி கூட்டணியில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.

அதாவது, குழந்தைக் கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்த திரைப்படத்தில் அதர்வாக்கு ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் நடித்து வருகிறார். மேலும், இந்த திரைப்படத்தில் அருண் பாண்டியன், சீதா, முனீஸ்காந்த், சின்னி ஜெயந்த், அறந்தாங்கி நிஷா ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மிகப்பெரிய த்ரில்லர் திரைப்படமாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது திரில்லர் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சில மணி நேரத்திலேயே இதுவரை மூன்று மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

மேலும், திரில்லர் திரைப்படம் வரும் செப்டம்பர் 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ட்ரெய்லர் மக்களிடையே நல்லவரவேற்பை பெற்ற நிலையில் திரைப்பட வெளியீட்டினை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here