ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதி போட்டியில் சானியா மிர்சா & போபண்ணா ஜோடி ஏமாற்றம்!!

0
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதி போட்டியில் சானியா மிர்சா & போபண்ணா ஜோடி ஏமாற்றம்!!
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதி போட்டியில் சானியா மிர்சா & போபண்ணா ஜோடி ஏமாற்றம்!!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய சானியா மிர்சா, ரோஹன் போபண்ணா ஜோடி, பிரேசில் ஜோடியிடம் வீழ்ந்தது.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்:

மெல்போர்ன் பார்க்கில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் கடந்த 9ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான சானியா மிர்சா, ரோஹன் போபண்ணா, தமிழகத்தை சேர்ந்த ஜீவன், பாலாஜி உள்ளிட்ட பலர் பங்கு பெற்றனர். இதில், ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்கள் தொடர் ஏமாற்றத்தையே ஏற்படுத்தி வந்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனால், கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் சானியா மிர்சா, ரோஹன் போபண்ணா அரையிறுதியில் பிரிட்டன் மற்றும் அமெரிக்க ஜோடியை 2-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தது. இதையடுத்து, இன்று நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில், பிரேசிலின் லூயிசா ஸ்டெபானி மற்றும் ரஃபேல் மாடோஸை எதிர்த்து இந்திய ஜோடி போட்டியிட்டது.

IND vs NZ 1st T20: தொடர் வெற்றியை ருசிக்குமா இந்தியா?? நியூசிலாந்துக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!

இதில், இந்திய ஜோடி கடுமையாக போராடி 6-7 என்ற புள்ளியில் முதல் செட்டை இழந்தது. இதனை தொடர்ந்து நடைபெற்ற 2 வது செட்டில் முழு ஆதிக்கத்தையும் செலுத்திய பிரேசில் ஜோடி 6-2 என எளிதாக கைப்பற்றியது. இந்த போட்டியில், முதல் 2 செட்டையும் கைப்பற்றிய பிரேசிலின் லூயிசா ஸ்டெபானி மற்றும் ரஃபேல் மாடோஸ் கோப்பையை தட்டி சென்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here