IND vs NZ 1st T20: தொடர் வெற்றியை ருசிக்குமா இந்தியா?? நியூசிலாந்துக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!

0
IND vs NZ 1st T20: தொடர் வெற்றியை ருசிக்குமா இந்தியா?? நியூசிலாந்துக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!
IND vs NZ 1st T20: தொடர் வெற்றியை ருசிக்குமா இந்தியா?? நியூசிலாந்துக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில், இன்று ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் இந்திய அணி களமிறங்க உள்ளது.

IND vs NZ:

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, இந்திய அணிக்கு எதிராக தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாட திட்டமிட்டிருந்தது. இதன்படி, விளையாடப்பட்ட ஒருநாள் தொடரை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அபாரமாக செயல்பட்டு 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்தது. இதனை தொடர்ந்து, நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர் இன்று முதல் நடைபெற இருக்கிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட சில சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், ஹர்திக் பாண்டியா இந்திய அணியை தலைமை தாங்க உள்ளார். இவர் தலைமையின் கீழ் இந்திய அணி பல டி20 தொடர்களை வென்ற நிலையில், இந்த தொடரையும் வென்று சாதனையை நிலை நிறுத்திக் கொள்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த தொடரின் முதல் டி20 போட்டியானது, ராஞ்சியில் உள்ள JSCA சர்வதேச மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் ரோஹித் இல்லாத நிலையில், சுப்மன் கில்லுடன் இஷான் கிஷன் இணைந்து தொடக்கம் தருவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், சூர்யகுமார், உம்ரான் மாலிக், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்டோர் தங்களது அதிரடியை காட்டுவார்கள்.

NZ க்கு எதிரான T20 இந்திய அணியில் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்:

ஹர்திக் பாண்டியா (சி), சுப்மன் கில், இஷான் கிஷன், ராகுல் திரிபாதி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here