திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தின் எண்ணற்ற சிறப்புகள் – திருக்கார்த்திகை ஸ்பெஷல்!!

0

கார்த்திகை தீபம் திருவண்ணாமலையில் மிக சிறப்பாக கொண்டப்படுகிறது. கார்த்திகை மாதம் சிவனுக்கு உரிய மாதமாக கருதப்படுகிறது. திருவண்ணாமலையில் ஏற்றப்படும் தீபத்தை நேரில் காண்பதால் பல நன்மைகள் நடைபெறும் என்று கூறப்படுகிறது. அவற்றின் நன்மைகள் என்ன என்ன என்பதை முழுமையாக பார்க்கலாம்.

திருவண்ணாமலை ஸ்பெஷல்:

திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபத்தை பார்த்தாலே இருபத்தொரு தலைமுறைகள் முக்தி கிடைக்கும். திருவண்ணாமலை தீபத்தை பார்த்து “ஓம் நம சிவாய” என்ற மந்திரந்தை உச்சரித்தாலே மூன்று கோடி தடவை உச்சரித்தற்கு சமம். இந்த தீபத்தின் ஒளி நம் உடம்பில் பட்டால் ஆன்ம சக்தி அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

திருக்கார்த்திகை நாளன்று திருவண்ணாமலையில் 5 முறை கிரிவலம் செய்தால் ஒருவர் என்ன பாவம் செய்திருந்தாலும் தீர்ந்துவிடும். மலையில் தீபம் ஏற்றப்படும் பொழுது “தீப மங்கள ஜோதி நமோ, நமஹ” என்ற பாடலை பாடினால் வாழ்க்கையில் மங்களம் உண்டாகும். திருவண்ணாமலையில் தீபத்திற்கு ஊற்றப்படும் நெய்யில் மூலிகை கலப்பதாக கூறப்படுகிறது. இதனால், தீய சக்திகள் விலகும்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

திருவண்ணாமலை சுமார் 2,668 அடி உயரம் கொண்டது. கீழிருந்து மலைக்கு செல்வதற்கு 4 மணிநேரம் ஆகும் என்று குறிப்பிடப்படுகிறது. கார்த்திகை தீபத்தன்று சிவலிங்கம் முன்பு நெய்தீபம் இட்டு வழிபட்டால் அவர்களது வாழ்க்கை சிறப்பாக இருக்கும். குழந்தை பாக்கியம் வேண்டும் நினைப்பவர்கள் கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரத்தில் திருவண்ணாமலையில் தீபம் ஏற்றினால் குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும்.

திருக்கார்த்திகை நாளன்று 27 தீபங்கள் எந்தெந்த இடங்களில் ஏற்ற வேண்டும்?? முழு விளக்கம் இதோ!!

சிவபெருமான் கார்த்திகை நாளில் அக்கினியில் நடனம் ஆடுவதாக கூறப்படுகிறது. இதற்கு முக்தி நடனம் என்று பெயர். கார்த்திகை திருநாளன்று கோவில்களில் சொக்கப்பனை கொளுத்துவார்கள் ஆனால், திருவண்ணாமலையில் மட்டும் இதை செய்வது இல்லை. திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்படும்பொழுது அதை நேரில் காண முடியாதவர்கள் தரிசன நேரத்தில் அதை நினைத்ததாலே, அதற்கான பலன் கிடைக்கும். பஞ்சபூத ஸ்தலங்களுக்குள் திருவண்ணாமலை நெருப்புக்குரிய ஸ்தலமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here