16 ஓவரில் 40-தே ரன், ஆனா ஒரு விக்கெட் கூட அஸ்வின் எடுக்கல…, என்ன தான் காரணம்??

0
16 ஓவரில் 40-தே ரன், ஆனா ஒரு விக்கெட் கூட அஸ்வின் எடுக்கல..., என்ன தான் காரணம்??
16 ஓவரில் 40-தே ரன், ஆனா ஒரு விக்கெட் கூட அஸ்வின் எடுக்கல..., என்ன தான் காரணம்??

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் நாள் ஆட்டத்தில் அஸ்வின் விக்கெட் வீழ்த்ததற்க்கான காரணம் இது தான் என தகவல் வெளியாகி உள்ளது.

அஸ்வின்:

இந்திய அணியானது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக, பார்டர் கவாஸ்கர் டிராபியின் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் 3 வது போட்டி நேற்று இந்தூரில் தொடங்கியது. இதில், முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 109 ரன்களுக்குள் ஆல் அவுட்டானது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

ஆஸ்திரேலியா சார்பாக, மேத்யூ குஹ்னெமன் 5, நாதன் லியோன் 3 மற்றும் டாட் மர்பி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர். இதையடுத்து களமிறங்கிய, ஆஸ்திரேலிய அணியானது, முதல் நாள் முடிவில், 4 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்திருந்தது. இந்த 4 விக்கெட்டுகளையும் இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளரான ஜடேஜா வீழ்த்தி அசத்தினார்.

முதல் நாள் ஆட்டத்தில், சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்த நேரத்தில், அஸ்வின் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தாதது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது. இதற்கு காரணம் அவர், சற்று வித்தியாசமாக பந்து வீச முயற்சித்ததே ஆகும். இதனை தொடர்ந்து, செய்ததால் தான் 16 ஓவரில் 40 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்த இவரால், ஒரு விக்கெட்டையும் வீழ்த்த முடியாத நிலை ஏற்பட்டது என கூறப்படுகிறது. இந்த தவறை திருந்தி இன்று 2ம் நாள் ஆட்டத்திலாவது, விக்கெட் வேட்டையை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here