
கோலிவுட் திரையிலும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் அசோக் செல்வன். அண்மையில் இவர் நடித்து திரைக்கு வந்திருந்த ”போர் தொழில்” திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் கல்லா கட்டி இருந்தது. மேலும் கடந்த 13ஆம் தேதி அசோக் செல்வனுக்கும் நடிகை கீர்த்தி பாண்டியனுக்கும் திருமணம் முடிந்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
ஆனால் சிலர் கீர்த்தி பாண்டியனின் நிறம் குறித்து சில மோசமான கமெண்ட்களை செய்து வந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வெள்ளையாக இருந்தால் தான் அழகு என்று இல்லை. கருப்பாக இருந்தாலும் அழகு தான் என்று அசோக் செல்வன் பல 5 வருடங்களுக்கு முன்பு தனியார் சேனல் ஒன்றில் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த இணையவாசிகள் கீர்த்தி பாண்டியனை கேலி செய்தவர்களுக்கு அசோக் பாண்டியன் அன்றே பதிலடி கொடுத்துள்ளார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.