அரியர் கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் தரலாம் – உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து!!

0
Madurai High court
Madurai High court

பொறியியல் கல்லூரிகளில் டிப்ளமோ பயிலும் மாணவர்களுக்கு அரியர் கட்டணம் செலுத்த கூடுதல் கால அவகாசம் தரலாம் என மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி வைத்தியநாதன் கூறியுள்ளார். இது தொடர்பாக ராமநாதபுரத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கால அவகாசம்:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 6 மாதங்களுக்கு மேலாக கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் வகுப்புகள், தேர்வுகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வருகிறது. மேலும் தேர்வுக்கட்டணம் ஆன்லைன் முறையில் மட்டுமே செலுத்தும் முறை இருப்பதால் பல கிராமப்புற மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இதனால் குறிப்பிட்ட கால அவகாசத்தில் அவர்களால் கட்டணத்தை செலுத்த முடியவில்லை. தற்போது தேர்வுகளும் முடிவடைந்து விட்டதால் அரியர் கட்டணம் செலுத்தாத மாணவர்கள் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

இந்நிலையில் டிப்ளமோ இன்ஜினியரிங் அரியர் கட்டணம் செலுத்த கூடுதல் கால அவகாசம் கோரி ராமநாதபுரம் தனியார் கல்லூரி மாணவர் ஒருவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இன்று விசாரணைக்கு வந்த போது நீதிபதி வைத்தியநாதன், கொரோனா பரவல் காரணமாக கல்லூரியில் இறுதிபருவம் தவிர பிற மாணவர்களுக்கு தேர்வின்றி முழு தேர்ச்சி அறிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் தேர்வெழுத அனுமதி கோரி சில அரியர் மாணவர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

நடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் – கொந்தளிப்பில் ரசிகர்கள்!!

இதனால் மாணவர்கள் நலனுக்காக தேர்வுக்கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் தரலாம் என கருத்து தெரிவித்துள்ளார். மேலும் தேர்வுகளை ரத்து செய்வதை விட, இது சிறந்த முடிவாக இருக்கும் என கூறிய நீதிபதி, மறுமதிப்பீடு ரிசல்ட் வருவதற்குள் தேர்வுக்கட்டண அவகாசம் முடிவடைந்துள்ளதாக கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here