அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டதில் விதிமீறல் இல்லை – தமிழக அரசு திட்டவட்டம்!!

0
Tamilnadu Government
Tamilnadu Government

கல்லூரி மாணவர்களுக்கு அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று அரசு சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில் அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதில் எந்தவித விதிமீறலும் இல்லை என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அரியர் தேர்வுகள்:

கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் மாணவர்களின் நலன் கருதி இறுதிபருவ தேர்வுகள் தவிர்த்து பிற தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. தமிழக அரசின் உத்தரவில் அரியர் தேர்வுகளுக்கு பணம் செலுத்தி காத்திருக்கும் மாணவர்களுக்கும் தேர்வுகள் ரத்தாகி அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இது லட்சக்கணக்கான மாணவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கல்வியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் மற்றும் வழக்கறிஞர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அரியர் தேர்வுகள் ரத்து முடிவை ஏற்க முடியாது எனவும் அவை விதிகளுக்கு புறம்பானது என AICTE மற்றும் யுஜிசி ஏற்கனவே தங்களது பதில் மனுக்களை தாக்கல் செய்து விட்டன. மேலும் நேற்று நடைபெற இருந்த வீடியோ கான்பரன்சிங் விசாரணையும், மாணவர்களின் இடையூறு காரணமாக நடைபெறவில்லை.

Chennai_High_Court
Chennai_High_Court

இந்நிலையில் தமிழக அரசு சார்பில் தற்போது பதில்மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில் இன்ஜினியரிங், கலை, அறிவியல் மற்றும் எம்சிஏ படிப்புகளுக்கான அரியர் தேர்வுகள் ரத்து முடிவில் எந்தவித விதிமீறலும் இல்லை. அனைத்து பல்கலை நிர்வாகத்திடமும் ஆலோசித்த பின்னரே முடிவு செய்யப்பட்டு உள்ளது. கொரோனாவால் கல்லூரிகள் நீண்ட நாட்களாக மூடப்பட்டு உள்ளதால் மாணவர்கள் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

மேலும் அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது யுஜிசி விதிகளுக்கு முரணானது இல்லை. மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here