விடுமுறையை ஈடு செய்ய “சனிக்கிழமை பள்ளிகள்” இயங்கும்.., அன்பில் மகேஷ் அதிரடி முடிவு!!

0
விடுமுறையை ஈடு செய்ய "சனிக்கிழமை பள்ளிகள்" இயங்கும்.., அன்பில் மகேஷ் அதிரடி முடிவு!!

தமிழகத்தில் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு ஒரு முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

சனிக்கிழமை வேலை:

தமிழகத்தில் தீபாவளி விடுமுறைக்கு பின்னர், எல்லா பள்ளிகளும் வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது. சமீப காலமாக வடகிழக்கு பருவமழை ஆரம்பித்து வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் தமிழகத்தில் ஆங்காங்கே இடியுடன் கூடிய கனத்த மழை பரவலாக பெய்து வருகிறது. இந்த காரணத்தால் அவ்வப்போது பள்ளி/கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

தமிழகத்தில் இனி கரகாட்டத்தில் கவர்ச்சி இருக்க கூடாது.., புதிய நிபந்தனைகள் வெளியிட்ட உயர் நீதிமன்றம்!!

இதனால் மாணவர்களின் படிப்பில் இடையூறு ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது மழையின் காரணமாக விடப்படும் விடுமுறை நாட்களை, ஈடு செய்யும் விதமாக சனிக்கிழமை அன்று அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here