ஐபிஎல் 2023 மினி ஏலம்…, ஒரு வீரருக்காக போட்டி போட காத்திருக்கும் CSK & பஞ்சாப் கிங்ஸ் லெவன்??

0
ஐபிஎல் 2023 மினி ஏலம்..., ஒரு வீரருக்காக போட்டி போட காத்திருக்கும் CSK & பஞ்சாப் கிங்ஸ் லெவன்??

அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஏலத்தில் CSKக்கும் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணிக்கும் இடையே கடுமையான போட்டி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் மினி ஏலம்:

இந்தியாவின் பிரபலமான உள்ளூர் தொடரான ஐபிஎல் நடப்பு ஆண்டு வரை 15 சீசனை கடந்து உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 16வது சீசனுக்கு முன்கூட்டியே மினி ஏலம் நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் அடுத்த (டிசம்பர்) மாதம் 16ம் தேதி மினி ஏலம் நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனால், ஐபிஎல் அணி உரிமையாளர்கள் அனைவரும் தங்களது அணியை வலுவாக கட்டமைப்பதற்காக, தற்போது நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை மற்றும் இந்தியாவின் உள்ளூர் போட்டிகள் போன்றவற்றில் சிறந்து விளங்கும் வீரர்களை குறித்து வைத்துக் கொண்டு வருகிறார்கள். இந்த வகையில், பஞ்சாப் கிங்ஸ் லெவன் நிர்வாகம் அணியின் கேப்டனாக தவானை சமீபத்தில் அறிவித்திருந்தது.

WTT டேபிள் டென்னிஸ் 2022: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய மணிகா பத்ரா-சத்யன் ஞானசேகரன்!!

இதனை தொடர்ந்து, மேலும், ஆஸ்திரேலியாவின் கேமரூன் கிரீன், இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஒரு காலத்தில் CSK வின் சுட்டி குழந்தையாக இருந்த சாம் கர்ரன் உள்ளிட்டோரையும் பஞ்சாப் அணி வரும் ஏலத்தில் எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், CSK அணியும் இந்த முறை சாம் கர்ரன், ஷர்துல் தாக்கூர் உள்ளிட்ட சிலரை எடுப்பதற்காக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனால், வரும் டிசம்பர் 16ம் தேதி நடைபெறும் ஏலம் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here