தமிழக பள்ளிகளுக்கு இந்த தேதி வரை விடுமுறை நீடிப்பு.., அதிரகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு!!

0
தமிழக பள்ளி மாணவர்களே.., இந்த தேதியில் விடுமுறை உறுதி..., அதிகாரப்பூர்வ தகவல்!!
தமிழக பள்ளி மாணவர்களே.., இந்த தேதியில் விடுமுறை உறுதி..., அதிகாரப்பூர்வ தகவல்!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான மாணவர்கள் சுற்றுலா, விளையாட்டு என விடுமுறையை குதூகலித்து வருகின்றனர். இந்நிலையில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1ம் தேதியும், 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5ம் தேதியும் பள்ளிகள் ரீஓபன் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதை தள்ளி போட வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஆலோசனை செய்து இன்று அறிவிக்க உள்ளதாக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

ஆதார் அட்டை திருத்தம் செய்யணுமா., முதல இத தெரிஞ்சுக்கோங்க?? முக்கிய தகவல்!!!

அதன்படி இன்று ஆலோசனை கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், “தமிழகத்தில் கத்திரி வெயில் காரணமாக கோடை விடுமுறை நீட்டிக்க வாய்ப்பு. ஜூன் 5 அல்லது ஜூன் 7 ஆம் தேதிகளில் தான் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு முதல்வர் ஆலோசனைக்கு பின்னரே அறிவிக்கப்படும்.” என தெரிவித்துள்ளார்.  இந்நிலையில் இப்பொழுது ஆலோசனைக்கு பின்னர் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது தமிழக பள்ளிகள் ஜூன் 7 ஆம் தேதி தான் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here