ஆதார் அட்டை திருத்தம் செய்யணுமா., முதல இத தெரிஞ்சுக்கோங்க?? முக்கிய தகவல்!!!

0

நாடு முழுவதும் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் ஆதார் அட்டை முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது. இதன் காரணமாக ஆதாரில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் தவறாக இருக்கும் பட்சத்தில் அதனை திருத்தும் வசதி ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆன்லைனில் https://uidai.gov.in/ என்ற தளத்தில் திருத்தம் மேற்கொள்பவர்களுக்கு சில நேரங்களில் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

இதற்கு முக்கிய காரணமே சில தவறுகள் செய்வதால் தான். அதன்படி முறையாக ஆன்லைனில் ஆதார் புதுப்பிக்கும் போது தெரிந்து கொள்ள விவரங்கள் வகுக்கப்பட்டுள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

  • பெயர், முகவரி உள்ளிட்ட சுய விவரங்கள் ஆங்கிலம் (பெரிய எழுத்துக்களில்) அல்லது உள்ளூர் மொழிகளில் பிழையில்லாமல் நிரப்ப வேண்டும்.
  • தங்களது வேலை விவரம் அல்லது பதவிகளை பதிவிட கூடாது.
  • தேவையான ஆவணங்களின் நகலை பதிவேற்றம் செய்யாமல் ஒரிஜினலை ஸ்கேன் செய்து பதிவேற்ற வேண்டும்.
  • முக்கியம் என குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் பதிவிட வேண்டும்.
  • புதுப்பிப்பு பணி முடிந்தவுடன் தோன்றும் URN எண்ணை பாதுகாப்பாக வைத்து அவ்வப்போது நிலையை சரிபார்க்க வேண்டும்.
  • பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண் இல்லை என்றால் கண்டிப்பாக இ-சேவை மையம் மூலமே புதுப்பிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here