வாழ்க்கை பாடத்தை நாசுக்கா சொல்லி கொடுத்தாரு.., அஜித் குறித்து மனம் திறந்த அமீர்-பாவானி!!

0
வாழ்க்கை பாடத்தை நாசுக்கா சொல்லி கொடுத்தாரு.., அஜித் குறித்து மனம் திறந்த அமீர்-பாவானி!!
வாழ்க்கை பாடத்தை நாசுக்கா சொல்லி கொடுத்தாரு.., அஜித் குறித்து மனம் திறந்த அமீர்-பாவானி!!

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பேமஸான, அமீர் பாவனி ஜோடி, நடிகர் அஜித்துடன் இருந்த சுவாரஸ்ய தருணங்கள் குறித்த தகவலை ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளனர்.

ஜோடி பேட்டி :

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம், பெரிய அளவில் பேசப்பட்ட ஜோடி என்றால் அது அமீர்-பாவனி ஜோடி தான். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து, பிபி ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர்கள் இதன் டைட்டில் பட்டத்தை தட்டிச் சென்றனர். அமீர் மீதான காதலை தொடர்ந்து மறுத்து வந்த பாவனி, இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு அவருக்கு ஓப்பனாக லவ் ப்ரொபோஸ் செய்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த ஜோடி, அஜித்தின் துணிவு படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்திருந்தனர். இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய இவர்கள் அஜித், சிபி மற்றும் நாங்கள் இருவர் என 4 பேரும் சேர்ந்து ஒரு ரெஸ்டாரண்டுக்கு சென்று இருந்தோம். அங்கு யாருமே இல்லை. எங்களை அழைத்துச் சென்ற அஜித் சார், உட்கார வைத்து கிட்டத்தட்ட 2:30 மணி நேரம் எங்களிடம் பேசினார்.

அம்மாவான நடிகை ஹன்சிகா மோத்வானி .., கண்கலங்க வைத்த மாஸ் சம்பவம்!!

வாழ்க்கையை எப்படி கொண்டு செல்ல வேண்டும், எப்படி சாதிக்க வேண்டும் என்பதை நாசுக்காக எடுத்துரைத்தார். பேசி முடித்துவிட்டு, சரி பார்த்துக்கோங்க bye என அவர் சொல்லிவிட்டு போனதை இப்போதும் எங்களால் மறக்க முடியாது என அமீர் உருக்கமாக பேசினார். பின் பாவனி, அஜித் சார் படத்தில் போட்டிருந்த அந்த white ஷர்ட்டோடு திரும்பி நின்று எங்களுக்கு டாடா காட்டி விட்டு சென்றதை இப்போ வரை மறக்க முடியாது என, அஜித் உடனான சுவாரசிய தருணங்களை பகிர்ந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here