கல்யாணம் நடக்கும், ஆனா இப்போதைக்கு இல்லை – திடீரென குண்டை தூக்கி போட்ட அமீர் பாவனி!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முக்கிய பிரபலங்களான அமீர் மற்றும் பாவனி இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ள நிலையில், இருவரும் தங்கள் கல்யாண ஆசைகளை ஆளாளுக்கு அடுக்கியுள்ளனர்.

அமீர் பாவனி:

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம், பேமஸ் ஆனவர்கள் அமீர் மற்றும் பாவனி. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பி.பி ஜோடிகள் என்ற டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று, இருவரும் டைட்டிலை தட்டிச் சென்றனர். ஆரம்பத்தில் இருந்தே பாவனியை காதலித்து வந்த அமீர், ஆடி ஓடி ஒரு வழியாக அவரை சம்மதிக்க வைத்து விட்டார்.

இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். இது குறித்து சமீபத்தில் பேசிய அமீர் காடு, மரம் நிறைந்த ஒரு பகுதியில் உள்ள பங்களாவில் வைத்து திருமணம் செய்ய வேண்டும் என ஆசை என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய பாவனி, ஓடிப்போய் த்ரில்லான திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஆசை என தெரிவித்தார். தொடர்ந்து, இருவரும் படம் நடித்து வருவதாகவும், பெரிதாக ஏதாவது சாதித்த பின்பு தான் திருமணம் செய்து கொள்வோம் என வெளிப்படையாக அறிவித்துள்ளனர். இருவரின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here