நாட்டில் பொருளாதார நெருக்கடி எதிரொலி.., ஆன்லைன் வர்த்தக சேவைகள் நிறுத்தம்….!!

0
நாட்டில் பொருளாதார நெருக்கடி எதிரொலி..,ஆன்லைன் வர்த்தக சேவைகள் நிறுத்தம்….!!
நாட்டில் பொருளாதார நெருக்கடி எதிரொலி..,ஆன்லைன் வர்த்தக சேவைகள் நிறுத்தம்….!!

நாடு முழுவதும் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் இரண்டு முக்கிய ஆன்லைன் ஷாப்பிங் சேவைகள் உட்பட பல்வேறு ஆன்லைன் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

பொருளாதார நெருக்கடி:

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றி ஓராண்டு கடந்துவிட்டது. மேலும் தாலிபான்கள் ஆட்சி அமைத்த உடனேயே, ஏராளமான மக்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்றனர். இந்நிலையில் அந்நாட்டின் பொருளாதாரம் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதன் எதிரொலியாக அனைத்து ஆன்லைன் விற்பனை சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் சில தினங்களுக்கு முன்பு, மிகப்பெரிய 2 ஆன்லைன் விற்பனை சேவை நிறுவனங்கள் தங்களது பணிகளை ஆப்கானிஸ்தானில் நிறுத்திக் கொள்வதாக அறிவித்தது. அதாவது ஆப்கானிஸ்தான் நிர்வாகத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம் காரணமாக தான், நாடு தற்போது மிக மோசமான பொருளாதார சிக்கலில் சிக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் கிளிக்.ஆஃப் என்று மிகப் பெரிய ஆன்லைன் விற்பனை நிறுவனம் தனது வணிகத்தை நிறுத்திக் கொள்வதாக கடந்த சனிக்கிழமை அறிவித்தது. இதை தொடர்ந்து பக்கல் என்ற மற்றொரு ஆன்லைன் வணிக நிறுவனமும் தனது வணிகத்தை ஆப்கானிஸ்தானில் நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த சமயத்தில் நாட்டில், சுமார் 25 மில்லியன் மக்கள் வறுமையில் வாழ்ந்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும் 2 ஆன்லைன் விற்பனை நிறுவனம் தனது வணிகத்தை நிறுத்தி கொண்ட நிலையில், ஆன்லைன் டாக்ஸி செயலியான பூபர் என்ற நிறுவனமும் இந்துகோஷ் என்ற ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட் போன்றவையும் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here