மின்சார வாகனங்களுக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு., இன்று முதல் அமலுக்கு வரும் புது திட்டம்.., மத்திய அரசு அதிரடி!!!

0
மின்சார வாகனங்களுக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு., இன்று முதல் அமலுக்கு வரும் புது திட்டம்.., மத்திய அரசு அதிரடி!!!
இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் முதற்கட்டமாக FAME-II(FAME – Faster Adoption and Manufacturing of Electric Vehicles in India) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்திய நிலையில் இத்திட்டம் மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதனால் இன்று முதல் EMPS 2024 என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு துவங்க உள்ளது. மேலும் இத்திட்டத்திற்காக ரூபாய் 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இத்திட்டத்தின் மூலம் மின்சார வாகன ஓட்டிகளுக்கு மானியம் வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு பத்தாயிரம் வரையும், எலக்ட்ரிக் ஆட்டோ போன்ற மூன்று சக்கர வாகனங்களுக்கு ₹ 25,000 வரையும், பெரிய எலக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்களுக்கு ரூ.50,000 வரையும் மானியம் வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளனர். இத்திட்டத்தின் நோக்கம் என்னவென்றால் எலக்ட்ரிக் வாகனங்களின் விலையை குறைத்து பயன்பாட்டை அதிகப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபாடு மிகவும் குறையும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here