தமிழகத்தில் 30,122 பள்ளிகளில் காலை உணவு திட்டம்…, முதல்வர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!!

0
தமிழகத்தில் 30,122 பள்ளிகளில் காலை உணவு திட்டம்..., முதல்வர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், மதிய உணவு திட்டமானது கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, 1 முதல் 5 வகுப்பு வரையிலான 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை கடந்த 2022ம் ஆண்டு தமிழக முதல்வர் அறிமுகப்படுத்தினார். ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப் பட்ட இந்த திட்டத்தின் மூலம், 2022-2023 ஆம் கல்வியாண்டில் 1.14 லட்சம் தொடக்கப் பள்ளி மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனால், இந்த திட்டத்தை எதிர்வரும் கல்வியாண்டில் விரிவாக்கம் செய்து, மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் காலை உணவு வழங்க முடிவு செய்துள்ளது. இதற்கான வழி நெறிமுறைகளை தமிழக முதல்வர் சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். இதன் தொடர்ச்சியாக தற்போது, இந்த திட்டத்தை விரிவுபடுத்தும் பணிகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

சரத் பாபுவால் சீரழிந்த நடிகையின் வாழ்க்கை.., லிவிங் டு ரிலேஷன் ஷிப்பை நம்பி மோசம் போன சம்பவம்!!

இதன்படி, வரும் கல்வியாண்டில், தமிழகத்தில் உள்ள 30,122 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 18 லட்சம் மாணவர்கள் பயன் பெரும் வகையில், இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, செயல்படுத்தப்படவுள்ளது. மேலும், இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதற்காக, ஒவ்வொரு ஊராட்சியிலும் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்புக் குழுக்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு ஒன்றையும் பிறப்பித்துள்ளது. அதாவது, மாணவர்களுக்கு காலை உணவை தயார் செய்வதற்கான இடங்கள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் உள்ளிட்டவற்றை உடனடியாக தேர்வு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here