
தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சமீப காலமாக தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் குறைந்து புகை மண்டலமாக இருப்பதால் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்த சூழலில் மாணவர்கள் பள்ளிக்கு வர நேரிட்டால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
ரயில் பயணிகள் கவனத்திற்கு.., இந்த அறிவிப்பை மீறினால் ரூ.5000 அபராதம்.., தென்னக ரயில்வே அதிரடி!!!
இதனை கருத்தில் கொண்டு ஜனவரி மாதத்தில் வழங்கப்படும் குளிர்கால விடுமுறையை காற்று மாசுபாடு காரணமாக முன்கூட்டியே அறிவிக்க மாநில கல்வித்துறை அறிவுறுத்தியது. அதன்படி நாளை (நவ.9) முதல் 18ஆம் தேதி வரை அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது.