நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான மக்கள் அதிக அளவில் ரயில் பயணங்களையே விரும்புகின்றனர். மக்களின் வசதிக்காக ரயில்வே நிர்வாகமும் பல புது அறிவிப்புகளை வெளியிட்ட வண்ணம் உள்ளனர். மேலும் தீபாவளி பண்டிகை வர உள்ளதால் அதற்காக பல ஊர்களில் இருந்து சிறப்பு ரயில்களையும் இயக்கி வருகின்றனர். இந்நிலையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதாவது ரயில் பெட்டிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகளை எடுத்துச் செல்லக்கூடாது என அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பை மீறி பயணத்தின் போது யாரேனும் பட்டாசுகளை எடுத்து செல்வதாக தகவல் வந்தால் நிச்சயம் அவர்கள் மீது ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். மேலும் அவர்களின் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ரயில்வே எஸ் பி சுகுணா சிங் எச்சரித்துள்ளார்.