
தமிழகத்தில் அரசு துறைகளில் பணிபுரியும் பலரும் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் கடந்த 2019ஆம் ஆண்டு அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வுக்காக போராட்டம் நடத்தியபோது, எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து உறுதி அளித்து இருந்தார். இதன்பின் ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகள் கடந்த நிலையில், இதுவரை இந்த கோரிக்கையை இதுவரை நிறைவேற்றவில்லை என வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
இனிமே இந்த ஹிட் சீரியல் ஒளிபரப்பாகாது., இது தான் லாஸ்ட் எபிசோட்., வெளியான ஷாக்கிங் நியூஸ்!!
இந்த நிலையில் தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை நாட்கள் எனும் பாராமல் மக்களுக்கு சேவை செய்து வரும் அரசு மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என சட்ட போராட்டக் குழு தலைவர் டாக்டர் எஸ்.பெருமாள் பிள்ளை தமிழக அரசை வலியுறுத்தி உள்ளார். மேலும் தீபாவளி பரிசாக ஊதிய உயர்வை அறிவிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.