‘ராஜா ராணி’ ஆலியா மானசாவின் நிஜ அம்மா, அப்பாவை பார்த்துளீர்களா?? வேற லெவல் போங்க!!

0
"குடும்பத்துடன் கொண்டாட்டத்தில் இணைந்த ஆலியா, சஞ்சீவ் ஜோடி" - ரசிகர்களுக்கு நன்றி சொல்லி உருக்கம்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி சீரியலில் நாயகியாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் தான் ஆலியா மானசா. தற்போது இதுவரையிலும் யாரும் பார்த்திராத ஆலியா மானசாவின் அப்பா அம்மா புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆலியா மானசா

டிக் டாக் மூலம் பிரபலமான ஆலியா மானசாவிற்கு விஜய் டிவியில் ‘ராஜா ராணி’ வாய்ப்பு கிடைத்தது. மேலும் ஒரே சீரியலில் இவருக்கு அதிக பிரபலம் கிடைத்தது. ஆலியா மானசா ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறினார்.

இவருக்கும் சஞ்சீவுக்கும் இடையே கெமிஸ்ட்ரி ஒத்துப்போக இவர்களின் ஸ்டேட்டஸ் தான் எல்லாரின் வாட்சப்பிலும். மேலும் இருவருக்கும் நாளடைவில் காதல் மலர்ந்தது. வீட்டை எதிர்த்து திருமணம் செய்துகொண்டார் ஆலியா மானசா.

இதுவரையிலும் அவரின் வீட்டில் ஏற்று கொள்ளவில்லை. இதனை ஒரு நிகழ்ச்சியில் கூட வெளிப்படுத்தி இருப்பார். ஆனால் சஞ்சீவ் அவரை அம்மா அப்பா இல்லாத குறையை தீர்த்து வைக்கும் வகையில் பாசம் காட்டி வருகிறார்.

மேலும் ஆலியா மானசாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்ததும் சஞ்சீவ் தான். இந்நிலையில் ஆலியா மானசாவின் அம்மா, அப்பா புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here