அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 2021 நடைபெறுமா?? பொதுமக்கள் எதிர்பார்ப்பு!!

0

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 2021ம் ஆண்டு நடக்குமா நடக்காத என்ற கேள்வி பரவலாக மக்கள் மனதில் ஏற்படுகிறது. இதுகுறித்து முதல்வர் பழனிசாமியிடம் மனு அளிக்கப்போவதாக ஜல்லிக்கட்டு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு:21

உலகப்புகழ் பெற்ற நம் தமிழர்களின் வீரவிளையாட்டு ஜல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டு என்றாலே அலங்காநல்லூர் தான். இது ஆண்டுதோறும் நடைபெறுகிறது. ஜனவரி மாதம் வரும் தைப்பொங்கல் திருநாளில் 3ம் நாள் நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டை காண நம் நாடு மட்டுமல்ல, இந்த உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் வருகிறார்கள். மேலும், அவனியாபுரம், பாலமேடு போன்ற இடங்களிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும். தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பீட்டா எனும் அமைப்பு ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகள் துன்புறுத்தப்படுகின்றன. அதானல் அவ்விளையாட்டை நிறுத்தும்படி வழக்கு தொடர்ந்தனர். இதனால் ஜல்லிக்கட்டு சில ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது. போராடி பெற்ற தந்த சுதந்திரம் அதை காத்துக்கொள்ள வேண்டும் என்பது போல உலக மக்கள் அனைவரும் பீட்டா அமைப்பிடம் இருந்து போராடி பெற்று தந்தனர் இந்த ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டை, தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் விதமாக தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சென்னை மெரினா கடற்கரை உட்பட பல இடங்களில் போராட்டம் நடத்தினர்.

ஆன்லைனில் நீட் தேர்வு நடைபெறுமா??

இப்போராட்டத்துக்கு பலரும் தங்கள் ஆதரவை அளித்தனர். பல சினிமா நடிகர்களும், நடிகைகளும் நேரில் சென்று போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் தமிழக அரசுக்கு அழுத்தம் அதிகரிக்கவே பீட்டா அமைப்புக்கு தடை உத்தரவை பிறப்பித்து ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு மீண்டும் அனுமதி அளித்தது.

கொரோனா பாதிப்பால் 144 தடை உத்தரவு நடைமுறையில் இருக்கும் நிலையில் எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் பாதுகாப்பான முறையில் ஜல்லிக்கட்டு நடத்த முடிவு எடுத்திருப்பதாக குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து வாடிப்பட்டி வட்டாட்சியார் மற்றும் துணை வட்டாட்சியாளரிடமும் மனு அளித்தனர் ஜல்லிக்கட்டு விழா குழுவினர். மேலும் முதல்வரிடமும், துணை முதலமைச்சரிடமும், மதுரை மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளிக்க போவதாக முடிவு செய்துள்ளனர் விழா குழுவினர்.

கொரோனா பாதிப்பு இருக்கும் இந்த இக்கட்டான நேரத்தில் நம் தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெறுமா? இல்லை 2021ம் வருடம் மட்டும் தள்ளி போகுமா என தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here