டிச.21ல் வானில் தெரியும் ‘கிறிஸ்துமஸ் ஸ்டார்’ – 800 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்!!

0

டிசம்பர் 21 அன்று வானில் 800 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றப்போகும் கிறிஸ்துமஸ் நட்சத்திரத்தை வெறும் கண்ணாலேயே உலகின் எந்த பகுதியில் இருந்தும் காணலாம் என கூறப்படுகிறது. சூரிய குடும்பத்தில் மிகப் பெரிய இரண்டு கோள்களான வியாழன் மற்றும் சனி ஆகிய இரண்டும் நெருங்கி அருகில் வரும் போது ஒரு பெரிய நட்சத்திரத்தைப் போல் காட்சியளிக்கும். இது தான் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இரண்டு கோள்களும் நெருங்கி வரும் என்ற போதிலும் அவை இரண்டிற்கும் மில்லியன் மைல்கணக்கில் இடைவெளி இருக்கும். இவை இரண்டும் 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை அருகில் வருகின்றது. கடைசியாக 1226ம் ஆண்டு இந்த அறிய நிகழ்வை பூமியில் இருந்து காண முடிந்தது. அதற்க்கு அடுத்த 400 வருடங்கள் கழித்து 1623 ம் ஆண்டு நெருங்கி வந்த போது பூமியில் இருந்து இந்த நிகழ்வை காண முடியவில்லை. இதனால் 800 ஆண்டுகள் கழித்து தற்போது தெரியவிருக்கிறது.

டிசம்பர் 20, தேதி அன்று சூரியன் மறைந்ததும் தோன்றும் இந்த நட்சத்திரம் 22ம் தேதி வரை இருக்கும் என்றும், மேலும் 21ம் தேதியன்று மிகவும் பிரகாசமாக இருக்கும் என்றும், வருடத்தின் மிக நீண்ட இரவாக இருக்கும் என்று கூறுகின்றனர்.

சித்ராவிற்கு தொல்லை கொடுத்து வந்த அரசியல் பிரமுகர்!!

800 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் இந்த அரிய நிகழ்வை கண்டு கழிக்க வானியல் ஆர்வலர்கள் மிக ஆர்வத்துடன் உள்ளனர். மேலும் இந்த நட்சத்திரத்தை உலகின் எந்த பகுதியில் இருந்தும் பைனாகுலர் மற்றும் டெலெஸ்கோப் கருவியைக்கொண்டு பார்க்கலாம் என்று அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தெரிவித்துஉள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here