அழகப்பா பல்கலை தேர்வு முடிவுகள் 2020 வெளியீடு – எவ்வாறு தெரிந்து கொள்வது??

0

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் அதன் உறுப்பு கல்லூரிகளுக்கு செமஸ்டர் தேர்வு முடிவுகளை வெளியிட்டு உள்ளது. மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் தங்களது முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தேர்வு முடிவுகள் வெளியீடு:

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் இறுதிப்பருவ மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்த தீவிரமாக தயாராகி வருகின்றன. அண்ணா பல்கலைக்கழகம் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த உள்ளதாக தெரிவித்து உள்ள நிலையில், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகமும் வரும் செப்டம்பர் 21ம் தேதி முதல் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த திட்டமிட்டு உள்ளது. இதற்காக மாணவர்களின் விபரங்களை பதிவேற்றம் செய்யுமாறு அந்தந்த கல்லூரி நிர்வாகத்திற்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

பல்கலைக்கழக இறுதிப்பருவ தேர்வுகள் தேதி மாற்றம் – நிர்வாகம் சுற்றறிக்கை!!

இந்நிலையில் இளங்கலை இரண்டாம், நான்காம் பருவம் மற்றும் முதுகலை இரண்டாம் பருவ தேர்வு தேர்வு முடிவுகளை அழகப்பா பல்கலைக்கழகம் வெளியிட்டு உள்ளது. மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை www.alagappauniversity.ac.in/result என்ற இணைய முகவரியில் பதிவெண்களை உள்ளிட்டு தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here