சேப்பாக் மைதானத்தில் ‘வலிமை’ அப்டேட் கேட்ட ரசிகர்கள் – வைரலாகும் புகைப்படம்!!

0

இந்தியா-இங்கிலாந்து இடையே நடந்து வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியை காண வந்த நடிகர் அஜீத்தின் ரசிகர்கள் ‘வலிமை’ படத்தின் அப்டேட் கேட்டு போர்டு ஏந்தியுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்கள்

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், போனிகபூர் தயாரிப்பில் நடிகர் அஜித்தின் நடிப்பில் தற்போது உருவாகிவரும் திரைப்படம் ‘வலிமை’. கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின்னதாக தமிழ் நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் வெளியிடப்பட்டு வருகின்றன. விஜய், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் தற்போது திரையிடப்பட்டுள்ளன.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்தவகையில் நடிகர் அஜீத் நடித்து வரும் ‘வலிமை’ படத்தின் அப்டேட் கேட்டு சமூகவலைதளங்களில் ரசிகர்கள் நச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியா- இங்கிலாந்து இடையே நடந்து வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக் மைதானத்தில் நடைபெறுகிறது. கொரோனாவுக்கு பிறகு இப்பொழுது தான் ரசிகர்கள் மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வருடத்தில் காதலர் தினத்தை கொண்டாடும் பிரபலங்கள் – லிஸ்ட் இதோ!!

போட்டிநடைபெற்று கொண்டிருக்கும் போது நடிகர் அஜித்தின் ரசிகர்கள் ‘we want valimai update’ என்ற பதாகைகளை பிடித்தவாறு இருந்தனர். மேலும் ‘வலிமை’ அப்டேட் கேட்டு மைதானத்தில் சத்தமிட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here