முழு அளவு ரயில் போக்குவரத்து சேவை – ரயில்வே துறை புதிய அறிவிப்பு!!

0

கடந்த சில நாட்களாகவே ஏப்ரல் மாதம் முதல் முழு அளவு பயணிகளின் ரயில் சேவை தொடங்கப்படும் என்ற தகவல் வெளியாகி வந்தது. தற்போது இதுகுறித்து ரயில்வே அதிகாரபூர்வமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ரயில்வே:

கடந்த ஆண்டு கொரோனா காலம் என்பதால் ரயில்வே உட்பட அனைத்து போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் ரயில்வேயில் விரைவு வண்டி மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா பரவல் காரணமாக ரயில்வேயில் பல முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டது. தற்போது முழு அளவு பயணிகளை ரயில் சேவை ஏப்ரல் மாதம் முதல் தொடங்கப்படும் என்ற செய்தி வெளிவந்த வண்ணமாக இருந்து வந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது இதுகுறித்து ரயில்வே தனது அதிரகாரபூர்வமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி நாட்டில் முழு அளவு ரயில் போக்குவரத்துக்கு சேவை குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. கொரோனா பரவல் குறைந்து வருவதால் நாங்கள் ரயில் சேவையை அதிகரித்துள்ளோம். தற்போது வரை 65 சதவீத ரயில்கள் இயங்குகிறது. மேலும் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் புதிதாக 250க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டுள்ளது.

மனித கழிவுகளை மனிதர்கள் அள்ளத்தடை – மாநகராட்சி அதிரடி உத்தரவு!!

முழு அளவு ரயில் போக்குவரத்து தொடங்க வேண்டும் என்றால் நாங்கள் அனைத்து சூழ்நிலைகளையும் அறிந்து அதற்கேற்ப தான் செயல்பட முடியும். எனவே ஊடங்கங்கள் இனி தவறான செய்தியை பரப்ப வேண்டாம் என்றும் நாங்கள் முடிவெடுத்தபின்பு அதிரகாரபூர்வமான அறிவிப்பை நாங்களே ஊடகத்தில் வெளியிடுவோம் என்றும் ரயில்வே அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here