அஜித் AK 62 படத்தின் டைட்டில் வெளியீடு – அதிகாரப்பூர்வ போஸ்டரை வெளியிட்ட படக்குழுவினர்!!

0
அஜித் AK 62 படத்தின் டைட்டில் வெளியீடு - அதிகாரப்பூர்வ போஸ்டரை வெளியிட்ட படக்குழுவினர்!!
அஜித் AK 62 படத்தின் டைட்டில் வெளியீடு - அதிகாரப்பூர்வ போஸ்டரை வெளியிட்ட படக்குழுவினர்!!
நடிகர் அஜித் குமார் நடிக்க இருக்கும் AK 62 திரைப்படத்தை குறித்து சமூக வலைத்தளங்களில் ஒரு முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

ஏகே 62

தென்னிந்திய தமிழ் சினிமாவில் ரசிகர்களின் நம்பிக்கை நாயகனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான துணிவு படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அவரின் அடுத்த படத்திற்கான அப்டேட்க்கு மிகுந்த எதிர்பார்ப்பில் காத்து கொண்டிருக்கின்றனர். மேலும் இப்படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்க இருந்த நிலையில் தற்போது மகிழ் திருமேனி இயக்க இருக்கிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

ஆனால் இது குறித்த எந்த ஒரு அப்டேட் வெளியாகாமல் இருந்து வரும் நிலையில் அஜித் திரும்பவும் பைக் சுற்றுலா பயணம் மேற்கொள்ள தொடங்கி விட்டார். இதனால் AK 62 படத்தோட அப்டேட் வராது என்று ரசிகர்கள் திகைத்து நின்ற நிலையில், தற்போது அஜித் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது, நடிகர் அஜித் பிறந்த நாளான இன்று, AK 62 படக்குழுவினர் டைட்டிலுடன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில், மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்திற்கு விடாமுயற்சி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. தற்போது அந்த போஸ்டர் இணையத்தில் வைரலாக  பரவி வருகிறது. மேலும் ஷூட்டிங் விரைவில் தொடங்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here