போட்டோ ஷூட்டுக்கு தயாரான CSK வீரர்கள்…, புது ஹேர் ஸ்டைலில் தோனி…, வைரலாகும் புகைப்படம்!!

0
போட்டோ ஷூட்டுக்கு தயாரான CSK வீரர்கள்..., புது ஹேர் ஸ்டைலில் தோனி..., வைரலாகும் புகைப்படம்!!
போட்டோ ஷூட்டுக்கு தயாரான CSK வீரர்கள்..., புது ஹேர் ஸ்டைலில் தோனி..., வைரலாகும் புகைப்படம்!!

எதிர்வரும் ஐபிஎல் தொடருக்காக, ஒவ்வொரு அணியும், ப்ரோமோ ஷூட்டிங்கில் இறங்கி உள்ள நிலையில், CSK வீரர்களும், போட்டோ ஷூட்டில் அசத்தி வருகின்றனர்.

ஐபிஎல் 2023:

ஐபிஎல் தொடரின் 16 வது சீசனுக்காக, அனைத்து அணிகளும் டிசம்பர் மாதம் நடந்த ஏலத்தின் மூலம், தங்களது அணியை சிறப்பாக கட்டமைத்து உள்ளனர். இதன் மூலம், ஒவ்வொரு அணியும் சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டி, மற்ற அணிகளுக்கு எதிராக கடுமையாக போராடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியும் பட்டத்தை வென்றே தோனியை வழி அனுப்பும் என ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும், கடந்த சீசனில், கேப்டன் மாற்றம், அணிகளில் குழப்பம் உள்ளிட்டவையால், CSK அணி லீக் சுற்றுடன் வெளியேறி ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதனால், இந்த மாற்றங்களை எல்லாம் சரி செய்து எதிர்வரும் சீசனை வெல்வதற்காகவே, CSK அணியானது கடந்த மார்ச் 1ம் தேதியே தனது பயிற்சியை தொடங்கி உள்ளது. இதற்கிடையில், ஐபிஎல் 2023க்கான, போட்டோ ஷூட்டில் CSK வீரர்கள் இறங்கி உள்ளனர்.

இந்திய அணிக்கு எதிராக களமிறங்க இருக்கும் ஆஸ்திரேலிய நட்சத்திரங்கள்…, பயிற்சியாளர் வெளியிட்ட அப்டேட்!!

இந்த போட்டோ ஷூட்டில், CSK வின் தல என்று செல்லமாக அழைக்கப்படும் தோனி, ஹேர் கலரிங் செய்துள்ளது போல காட்சி அளிக்கிறார். இவரை தொடர்ந்து, இந்த போட்டோ ஷூட்டில், CSK வின் தீபக் சாஹர், ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்டோர் பங்கு பெற்றுள்ளனர். தற்போது இந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here