LEO படத்தையே வேண்டாம் என்று மறுத்த பிரபல நடிகை.., என்ன காரணம்னு தெரியுமா?

0
LEO படத்தையே வேண்டாம் என்று மறுத்த பிரபல நடிகை.., என்ன காரணம்னு தெரியுமா?
LEO படத்தையே வேண்டாம் என்று மறுத்த பிரபல நடிகை.., என்ன காரணம்னு தெரியுமா?

நடிகர் விஜய் நடிக்கும் லியோ படத்தில் பிரபல நடிகை நடிக்க மறுத்ததாக சமூக வலைத்தளங்களில் முக்கியமான தகவல் தீயாய் பரவி வருகிறது.

LEO திரைப்படம்;

“வாரிசு” திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் ‘லியோ’. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். அது போக இப்படத்தில் நடிகை திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதுவரை மிஷ்கின், கவுதம் மேனன், சாண்டி, அர்ஜுன் ஆகியோரின் பகுதிகள் படமாக்கப்பட்டு முடிந்துள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியது. தற்போது இப்படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில் லோகேஷ் தனது 37வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இந்த நிலையில் லியோ படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகை குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

2 படத்துக்கு மேல நடிச்சாச்ச, இனிமேல் வேணாம்.., பிரபல நடிகை மேல் கண்ணு வைத்த சிவகார்த்திகேயன்!!

அதாவது தளபதி விஜய் நடிக்கும் லியோ படத்தில் பிரபல நடிகை சாய் பல்லவியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்ததாம். ஆனால் படத்தின் கதையில் சாய் பல்லவி-க்கு முக்கியத்துவம் இல்லை என்பதால் அவர் நடிக்க மறுத்ததாக சொல்லப்படுகிறது. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here