இந்திய அணிக்கு எதிராக களமிறங்க இருக்கும் ஆஸ்திரேலிய நட்சத்திரங்கள்…, பயிற்சியாளர் வெளியிட்ட அப்டேட்!!

0
இந்திய அணிக்கு எதிராக களமிறங்க இருக்கும் ஆஸ்திரேலிய நட்சத்திரங்கள்..., பயிற்சியாளர் வெளியிட்ட அப்டேட்!!
இந்திய அணிக்கு எதிராக களமிறங்க இருக்கும் ஆஸ்திரேலிய நட்சத்திரங்கள்..., பயிற்சியாளர் வெளியிட்ட அப்டேட்!!

இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில், ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்கள் அணிக்கு திரும்ப உள்ளதாக பயிற்சியாளர் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணி:

சமீபத்தில் முடிந்த பார்டர் கவாஸ்கர் டிராபியில், ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர்களான டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜா இருவருக்கும் வெவ்வேறு போட்டியின் நடுவே காயம் ஏற்பட்டு இருந்தது. இதில், டேவிட் வார்னருக்கு, 2வது டெஸ்ட் போட்டியில், தலை மற்றும் முழங்கை போன்றவற்றில் காயம் ஏற்பட்டு இருந்ததால், மூளை அதிர்ச்சி ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனால், சிகிச்சைக்காக டேவிட் வார்னர் பார்டர் கவாஸ்கர் டிராபியில் இருந்து விலகினார். இவருக்கு ஏற்பட்டுள்ள காயங்கள் தற்போது குணமாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில், டேவிட் வார்னர் கலந்து கொள்வார் என ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு கூறியுள்ளார்.

“ஹர்திக் பாண்டியா இந்தியாவின் 3 வடிவ கேப்டனாக மாறும் நேரம் இதுதான்”…, சுனில் கவாஸ்கர் ஓபன் டாக்!!

மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான பட்டியலிலும் டேவிட் வார்னர் கண்டிப்பாக இருப்பார் என பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, கடைசி டெஸ்டில் பில்டிங்கின் போது, முழங்காலில் காயம் பட்ட உஸ்மான் கவாஜாவும் குணமடைந்து விட்டதாகவும் பயிற்சியாளர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here