பிரபல விஜய் பட நடிகை தற்கொலை வழக்கு – முக்கிய அரசியல் பிரமுகர் கைது!!

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை விஜயலட்சுமி, தற்கொலைக்கு முயன்ற வழக்கில், தற்போது பனங்காட்டு படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரமுகர் கைது:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை விஜயலட்சுமி. இவர் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த பிரண்ட்ஸ் படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து, பெரிய அளவில் பேசப்பட்டார். அதுபோல ஒரு சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், சின்னத்திரை தொடர்களில் நடித்து, ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் இடம் பிடித்தார். கடந்த 2020ஆம் ஆண்டு, இவர் தற்கொலைக்கு முயன்றார். இந்த வழக்கில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் பனங்காட்டு படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் உள்ளிட்டோர் காவல்துறையினர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அவர்கள் மேல், திருவான்மியூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். தற்போது, பண மோசடி வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் இவரை, நடிகை விஜயலட்சுமி வழக்கில் போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில், இவர் நாளை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here