
தென்னிந்திய தமிழ் சினிமாவில் மில்க் பியூட்டியாக ரசிகர்களை சொக்கி போக வைத்தவர் தான் நடிகை தமன்னா. இவர் ஆரம்பத்தில் மாடலிங்காக உள்ளே நுழைந்து பாலிவுட் பட வாய்ப்பு பெற்று நடிகை அவதாரம் எடுத்தார். அதன் பிறகு கேடி என்ற படத்தின் மூலம் வில்லியாக கலக்கி, பையா, படிக்காதவன், கல்லூரி, பாகுபலி போன்ற படங்களில் நடித்து தற்போது ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது மலையாளம், ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இப்படி பிசியாக நடித்து வரும் தமன்னா விஜய் வர்மாவை காதலித்து வருவதாக சோசியல் மீடியாவில் செய்திகள் தீயாய் பரவி வருகிறது. அதற்கு ஏற்ப அவர்கள் இருவரும் kiss அடித்தது. எங்கே சென்றாலும் ஒன்றாக செல்வது என ஒரு காதலர்கள் செய்வது போல் செய்து வருகின்றனர். இதனால் பலரும் அவர்கள் காதலிக்கிறார்கள் என்று கூறி வந்தனர். இந்நிலையில் இந்த காதல் வதந்தி குறித்து நடிகை தமன்னா விளக்கம் அளித்துள்ளார்.
பிரபல புகைப்பட கலைஞர் சாலை விபத்தில் மரணம்.., தமிழக முதல்வர் உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல்!!
அவர் கூறியதாவது, எனக்கு எதிராக பல வதந்திகள் தொடர்ந்து எழுந்து வருகிறது. இதுபோன்ற வதந்திகளை யார் கிளப்பி விடுகிறார்கள் என்று தெரியவில்லை. அதுமட்டுமின்றி அந்த வதந்திகளை படிக்கும் பொழுது எனக்கு சிரிப்பு தான் வருகிறது. மேலும் எல்லோருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது. அதனால் தயவு செய்து வதந்திகளை கிளப்பி விட வேண்டாம் என்று நடிகை தமன்னா கூறியுள்ளார்.