பிரபல புகைப்பட கலைஞர் சாலை விபத்தில் மரணம்.., தமிழக முதல்வர் உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல்!!

0
பிரபல புகைப்பட கலைஞர் சாலை விபத்தில் மரணம்.., தமிழக முதல்வர் உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல்!!
பிரபல புகைப்பட கலைஞர் சாலை விபத்தில் மரணம்.., தமிழக முதல்வர் உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல்!!

What a Karwad உணவு நிறுவனத்தின் இணை நிறுவனரும், பிரபல புகைப்படக் கலைஞருமான ஸ்டாலின் ஜேக்கப் மறைமலைநகர் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் காலமானார்.

ஸ்டாலின் ஜேக்கப்

தமிழகத்தில் முக்கிய நகரமான கோயம்புத்தூர் ஊரை சேர்ந்த ஸ்டாலின் ஜேக்கப் சிறந்த புகைப்பட கலைஞராக மக்கள் மத்தியில் பிரபலமானவர். இவரது பெரும்பாலான புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சொல்ல போனால் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் மறைவு அன்று அவர் எடுத்த எல்லா புகைப்படங்களும் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதுமட்டுமின்றி இவர் தனியாக கிளவுட் கிச்சன் மற்றும் What a Karwad என்ற ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் அவர் ஒரு நிகழ்ச்சிக்காக செங்கல்பட்டு சென்றுள்ளார். நிகழ்ச்சியை முடித்த பிறகு திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தாமிரபரணி பட ஷூட்டிங்கில் நடந்த கொடூர விபத்து.,60 பேர் நடுக்கடலில் மூழ்கிய சோகம்! இயக்குனர் ஹரி பகீர்!!

அதுமட்டுமின்றி இவருடன் பயணித்த விஷ்ணு என்பவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவரின் இறப்புக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட பல பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here