ரேஷன் கார்டு பெற புதிய நடைமுறைகள்., அரசின் நடவடிக்கையால் குழப்பத்தில் பொதுமக்கள்!!

0
ரேஷன் கார்டு பெற புதிய நடைமுறைகள்., அரசின் நடவடிக்கையால் குழப்பத்தில் பொதுமக்கள்!!
ரேஷன் கார்டு பெற புதிய நடைமுறைகள்., அரசின் நடவடிக்கையால் குழப்பத்தில் பொதுமக்கள்!!

இந்தியாவில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு நியாய விலை கடைகளில் சலுகை விலையில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ரேஷன் அட்டைகளில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மஞ்சள் நிறம் மற்றும் அரசு ஊழியர், வசதி படைத்தவர் ஆகியோர்களுக்கு சிவப்பு நிற அட்டைகளையும் புதுச்சேரி மாநில அரசு வழங்குகிறது. இப்போது இந்த அட்டைகளுடன் சேர்த்துகவுரவ குடும்ப அட்டையும் வழங்க முடிவு செய்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதன்படி அரசின் சலுகை பொருட்கள் தேவையில்லை என விரும்பும் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு இந்த குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. இதற்கு மஞ்சள் மற்றும் சிவப்பு நிற குடும்ப அட்டை உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் சிறப்பு பிரஜைகளாக கருதி ரேஷன் கடைகளில் தரப்படும் சலுகைகள் வழங்கப்படாது என்றும் புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

பிரபல புகைப்பட கலைஞர் சாலை விபத்தில் மரணம்.., தமிழக முதல்வர் உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல்!!

எனவே இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் குடும்ப தலைவர்கள் அசல் ரேஷன் அட்டையுடன் குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும். அப்படி இல்லை எனில் 9442194480 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டோ அல்லது வாட்சப் மூலமாக விவரங்களை பெற்று கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here