சாதனையாளர் விருதை பெற்ற ஸுருதி ஹாசன் .., புலிக்கு பொறந்தது பூனையாகுமா!!

0
சாதனையாளர் விருதை பெற்ற ஸுருதி ஹாசன் .., புலிக்கு பொறந்தது பூனையாகுமா!!
சாதனையாளர் விருதை பெற்ற ஸுருதி ஹாசன் .., புலிக்கு பொறந்தது பூனையாகுமா!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் நடிகை, பாடகி, இசை அமைப்பாளர் என பன்முகங்களைக் கொண்டவர். அதுமட்டுமின்றி இவர் சமூக சேவகியாகவும் செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் இவர் நடித்த வால்டர் வீரய்யா, வீர சிம்ஹா ரெட்டி படங்கள் பொங்கலை முன்னிட்டு திரையரங்கில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதனை தொடர்ந்து இவர் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் சாதனையாளர் விருது பெற்றுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகின. அதாவது டெல்லியில் இருக்கும் விஞ்ஞான் பவனில் பவர் காரிடார்ஸ்க்கு இந்திய சாதனையாளர் விருது பலருக்கு வழக்கமாக வழங்கப்பட்டு வருகிறது.

தனது தாயுடன் வடிவேலு கடைசியாக எடுத்துக்கொண்ட புகைப்படம்.., கண்கலங்க வைத்த நிகழ்வு!!

குறிப்பாக இந்த விருது பல்வேறு துறையில் வேலை பார்க்கும் நபர்கள் தேசத்திற்காக சேவை செய்ய முன்வந்த குடிமக்களின் முயற்சிகள் மற்றும் அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் விதமாக கொடுக்கப்படுகிறது. அந்த வகையில் ஸ்ருதிஹாசனுக்கு கொடுக்கப்பட்டது. இது குறித்து அவர் பேசியதாவது, இந்த அவார்டை வாங்கியதில் நான் அளவு கடந்த சந்தோசம் அடைகிறேன்.

மேலும் இந்த அவார்டு கொடுத்த நடுவர்களுக்கு எனது நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன். அதுமட்டுமின்றி கலைப் பணிக்காக பாராட்டப்படுவது எப்போதும் சேவையானது தான். முக்கியமான விஷயங்களுக்கு எனது தளத்தை பயன்படுத்துவதற்கான வாய்ப்பைப் பெற்றதற்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன் என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here