அடக்கடவுளே.., நடிகை ரோஜா திடீரென மருத்துவமனையில் அனுமதி.., அதிர்ச்சியில் ரசிகர்கள்!!!

0
அடக்கடவுளே.., நடிகை ரோஜா திடீரென மருத்துவமனையில் அனுமதி.., அதிர்ச்சியில் ரசிகர்கள்!!!
அடக்கடவுளே.., நடிகை ரோஜா திடீரென மருத்துவமனையில் அனுமதி.., அதிர்ச்சியில் ரசிகர்கள்!!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து கொண்டிருந்தவர் தான் நடிகை ரோஜா. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் ஹீரோயினாக நடித்து பட்டையை கிளப்பியுள்ளார். இதையடுத்து பிரபல இயக்குநர் ஆர்.கே. செல்வமணியை திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு விலகினார். இந்த தம்பதியருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

சினிமாவில் வெற்றி வாகை சூடிய ரோஜா, தற்போது அரசியலிலும் ஒரு கை பார்த்து வருகிறார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் ரோஜா, ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி வகித்து வருகிறார். தற்போது சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சராக இருந்து வருகிறார்.

ச்சீ.., என்ன சொன்னாலும் திருந்த மாட்டியா.., ஐஸ்வர்யாவால் வந்த புது பிரச்சனை.., கடுப்பான மூர்த்தி !!!!

இந்நிலையில் நடிகை ரோஜா சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்க சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நடிகை ரோஜாவுக்கு ஏற்பட்ட கால் வீக்கம் காரணமாக அவரை சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் அவர் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here