“Korean” படத்தில் நடிக்கும் கோவை சரளா?.., அவரே வெளியிட்ட தகவல்!!

0
"Korean" படத்தில் நடிக்கும் கோவை சரளா?.., அவரே வெளியிட்ட தகவல்!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி பெண் நகைச்சுவை நடிகைகளில் ஒருவராக கொடிக்கட்டி பறப்பவர் தான் நடிகை கோவை சரளா. இவர் நகைச்சுவை இளவரசி என கோலிவுட் திரையுலகினரால் செல்லமாக அழைக்கப்படுகிறார். இதுவரை 800 படங்களுக்கு மேலாக நடித்துள்ளார்.

 

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனாலும் இன்றும் ஓர் இளம் நடிகையை போல தான் உற்சாகம் குறையாமல் நடித்து வருகிறார். தற்போது இவர் லீடு ரோலில் நடித்த செம்பி திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் ஸ்லீப்பிங் சூப்பர் ஸ்டார் அஸ்வின் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

மோசடியை கண்டறிய சிபிசிஐடி-யும் இனி ரம்மி  விளையாடனும்.., உயர் அதிகாரிகள் அதிரடி உத்தரவு!!

சமீபத்தில் நடந்த செம்பி படத்தின் இன்டெர்வியூவில் தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு சிரித்தபடி பதில் கூறினார். அப்போது தொகுப்பாளர் கோவை சரளாவை பார்த்து நீங்கள் கொரியன் சீரிஸில் நடிக்க போவதாக சோசியல் மீடியாவில் தகவல் பரவி வருகிறதே அது உண்மையா என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு கோவை சரளா நிஜமாவா, அப்படி கூப்பிட்டா சொல்லுங்க நடிச்சு பார்க்கலாம் என்று சிரித்து கொண்டே பதில் அளித்தார். மேலும் கோவை சரளா பார்ப்பதற்கு கொரியன் படத்தில் நடிப்பவர் போல தான் இருக்கிறார் என்று தொகுப்பாளர் கூற, அப்ப இவங்கள வச்சு அடுத்த படத்தில் கொரியன் சீரிஸை ட்ரை பண்ணி பார்க்கலாம் என்று பிரபு சாலமன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here