ஒரு நிமிடத்துக்கு 5 லட்சம் கொடுக்கணும்.., மாப்பிள்ளை குடும்பத்திடம் பேரம் பேசிய ஹன்சிகாவின் அம்மா!!

0
ஒரு நிமிடத்துக்கு 5 லட்சம் கொடுக்கணும்.., மாப்பிள்ளை குடும்பத்திடம் பேரம் பேசிய ஹன்சிகாவின் அம்மா!!
ஒரு நிமிடத்துக்கு 5 லட்சம் கொடுக்கணும்.., மாப்பிள்ளை குடும்பத்திடம் பேரம் பேசிய ஹன்சிகாவின் அம்மா!!

நடிகை ஹன்சிகா மோத்வானியின் தாய் சோஹேல் கதுரியாவின் குடும்பத்தினரிடம் நிமிடத்திற்கு ரூ.5 லட்சம் கேட்டுள்ள சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை ஹன்சிகா மோத்வானி:

தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான “மாப்பிள்ளை” படத்தின் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தவர் தான் நடிகை ஹன்சிகா மோத்வானி. சமீபத்தில் இவர் நடித்த 50 வது திரைப்படமான மகா படம் படுதோல்வி அடைந்தது. இவர் கடைசியாக நடித்த எந்த திரைப்படமும் சரியாக போகாத நேரத்தில் சோஹேல் கதுரியா என்பவரை கடந்த டிசம்பர் 4, 2022 அன்று திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் ஜெய்ப்பூரில் கோலாகலமாக நடைபெற்றது.

இதை தொடர்ந்து அவர்களின் கல்யாண வீடியோவை டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் லவ் ஷாதி டிராமா என்ற பெயரில் வெளியீட்டு வருகின்றனர். இந்நிலையில் ஹன்சிகா மோத்வானியின் தாய் சோஹேல் கதுரியாவின் குடும்பத்தினரிடம் நிமிடத்திற்கு ரூ.5 லட்சம் கேட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது லவ் ஷாதி டிராமாவில் ஒளிபரப்பான கடைசி எபிசோடில் ஹன்சிகா மோத்வானியின் தாய் செய்த காரியம் சினிமா உலகில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

அதாவது அந்த எபிசோடில், சோஹேலின் குடும்பத்தினர் அனைவரும் எந்த Function-க்கு வந்தாலும் தாமதமாக வருகின்றனர் என்று ஹன்சிகா மோத்வானியின் தாய் புகார் கொடுத்தார். அதுமட்டுமின்றி இன்று நடக்கும் விழாவில் நீங்கள் வழக்கம் போல் தாமதமாக வந்தீர்கள் என்றால், ஒவ்வொரு நிமிடத்திற்கும் 5 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கையை வைக்கிறார். அதோடு எபிசோடு முடிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here