இறுதி சுற்று வாய்ப்பை இழந்த இந்திய ஜோடி…, இங்கிலாந்து ஓபனில் பதக்கம் வெல்லாமல் ஏமாற்றம்!!

0
இறுதி சுற்று வாய்ப்பை இழந்த இந்திய ஜோடி..., இங்கிலாந்து ஓபனில் பதக்கம் வெல்லாமல் ஏமாற்றம்!!
இறுதி சுற்று வாய்ப்பை இழந்த இந்திய ஜோடி..., இங்கிலாந்து ஓபனில் பதக்கம் வெல்லாமல் ஏமாற்றம்!!

இந்தியாவின் ட்ரீசா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி தென் கொரியா வீராங்கனைகளிடம் வீழ்ந்து இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை தவற விட்டனர்.

இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன்:

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் நட்சத்திரங்கள் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பலர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் பங்கு பெற்று விளையாடி வந்தனர். இந்த தொடரில் முன்னணி வீரர்கள் பலர் ஏமாற்றிய நிலையில், ட்ரீசா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி மட்டும் மகளிருக்கான இரட்டையர் பிரிவில் அடுத்தடுத்த சுற்றுகளுக்கு முன்னேறி இருந்தனர்.

நேற்று இந்த ஜோடி, காலிறுதிப் போட்டியில், சீன வீராங்கனைகளை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். இன்று நடைபெற்ற இந்த அரையிறுதிப் போட்டியில், இந்திய ஜோடி தென் கொரிய வீராங்கனைகளான S H லீ மற்றும் H N பயக் ஆகியோரை எதிர்த்து போட்டியிட்டனர்.

இந்த போட்டியில், தனது முதல் செட்டை 10-21 என்ற புள்ளிக் கணக்கில் இழந்த இந்திய ஜோடி, அடுத்த செட்டையும் 10-21 என்ற புள்ளிக் கணக்கில் இழந்தது. தொடர்ந்து 2 செட்டுகளை வென்ற தென் கொரிய வீராங்கனைகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளனர். இந்த போட்டியில், இந்திய ஜோடி தோல்வி அடைந்ததன் மூலம், இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் ஒரு பதக்கமும் வெல்லாமல் நாடு திரும்ப உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here