IND vs AUS: தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா…, பிளேயிங் லெவனில் யாருக்கு அதிக வாய்ப்பு?? முழு விவரம் உள்ளே!!

0
IND vs AUS: தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா..., பிளேயிங் லெவனில் யாருக்கு அதிக வாய்ப்பு?? முழு விவரம் உள்ளே!!
IND vs AUS: தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா..., பிளேயிங் லெவனில் யாருக்கு அதிக வாய்ப்பு?? முழு விவரம் உள்ளே!!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில், முதல் போட்டியில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வெல்ல 1-0 என முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து நாளை, இந்த இரு அணிகளுக்கு இடையிலான 2வது போட்டி ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஒய் எஸ் ராஜா ரெட்டி மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

இந்த போட்டியில் இந்திய அணி தொடரை வெல்லும் முனைப்பில் களமிறங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆனால், அதற்கு ஆஸ்திரேலிய அணி அதிக நெருக்கடி கொடுக்க கூடும். கடந்த போட்டியில், விலகிய ரோஹித் சர்மா, 2வது ஒருநாள் போட்டியில், கேப்டனாக களமிறங்குவார். இதனால், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக செயல்பட உள்ளார். ரோஹித் சர்மாவின் வருகையால், இஷான் கிஷன் பிளேயிங் லெவனில் இடம் பெறுவது கேள்விக்குறிதான்.

ஒருவேளை, இஷான் கிஷன் களமிறங்கினால், சூர்யகுமார் யாதவ் விளையாடும் லெவனில் இடம் பெறுவது சந்தேகம். இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை பொறுத்த வரையில், வேகத்தில் முகமது ஷமி, சிராஜுடன் உம்ரான் மாலிக் இணைய கூடுவார். ஆல் ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா, ஜடேஜா களமிறங்குவதுடன் சுழற்பந்து வீச்சில், குல்தீப் யாதவும் களமிறங்க உள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியில் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்:

ரோஹித் சர்மா (சி), சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ்/ இஷான் கிஷன், கே எல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, உம்ரான் மாலிக், முகமது ஷமி, குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here