பிதாமகன் பட நடிகர் திடீர் மரணம்.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!!

0
பிதாமகன் பட நடிகர் திடீர் மரணம்.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!!
தமிழ் சினிமாவை சேர்ந்த பல பிரபலங்கள் இப்போது உடல் நல குறைவால் மரணமடைந்து வருவது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வரிசையில் பிதாமகன் படத்தில் லைலாவுக்கு அப்பா கதாபாத்திரத்தில் நடித்த விஸ்வேஸ்வர ராவ் உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை மரணம் அடைந்த செய்தி திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பை தொடங்கிய இவர் பல படங்களில் துணை நடிகராகவும், காமெடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து அசத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் பல சீரியல்களிலும் இவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழில் மட்டுமல்லாமல் பல தெலுங்கு படங்களிலும் இவர் தனது நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here