நடிகர் விஷ்ணு விஷாலின் நிர்வாண புகைப்படம்.. ஷேர் செய்ய காரணம் இதுதான் – அவரே கூறிய பதில்!

0
நடிகர் விஷ்ணு விஷாலின் நிர்வாண புகைப்படம்.. ஷேர் செய்ய காரணம் இதுதான் - அவரே கூறிய காரணம்!

அண்மையில் நிர்வாண போட்டோக்களை ஷேர் செய்த நடிகர் விஷ்ணு விஷால், அது குறித்து மனம் திறந்து பேட்டியில் பேசியுள்ளார்.

விஷ்ணு விஷால்:

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் தான் நடிகர் விஷ்ணு விஷால். இவர் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். இதனை தொடர்ந்து ஜீவா, ராட்சசன், இன்று நேற்று நாளை போன்ற படங்கள் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர் நடிகைகள் தங்களது புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவது வழக்கத்தில் ஒன்று. இந்நிலையில் சமீபத்தில் விஷ்ணு விஷால் ஒரு நிர்வாண புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்த புகைப்படத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து நடிகர் விஷ்ணு விஷால் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

அதாவது, இது ஒரு போட்டோஷூட் அல்ல என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நாங்கள் தூங்கி எழுந்ததும் ஜுவாலா தனது போனில் க்ளிக் செய்த படங்கள் இவை. மேலும் அதிகமான ஹீரோக்கள் தங்கள் கட்டுடல் மேனிகளை காண்மித்து புகைப்படங்கள் எடுத்து கொள்கின்றனர். அதனை இணையத்திலும் பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலைமைக்கு வர நான் பெரிதும் கஷ்டப்பட்டுள்ளேன்.. அதை வெளியிடுவதில் எந்த தவறும் இல்லை என்று நினைத்து தான் இவ்வாறு செய்ததாக விளக்கம் அளித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here