கேரளாவில் விஜய்.. ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி நொறுங்கிய கார்.. வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

0

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை AGS என்டர்டைன்மென்ட் தயாரித்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக படகுழுவினர் கேரளாவிற்கு சென்றுள்ளனர். இவர்களைத் தொடர்ந்து நடிகர் விஜய் நேற்று (மார்ச் 18) கேரளாவுக்கு சென்று இருக்கிறார்.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி, கோதுமையுடன் இதுவும் கிடைக்கும்., மாஸ் அறிவிப்பை வெளியிட்ட உ.பி.!!!

அப்பொழுது விமான நிலையத்தில் அவரை வரவேற்க பல ஆயிரம் ரசிகர்கள் கூடி இருந்தனர். எப்படியாவது அவரை நேரில் பார்த்துவிட வேண்டும் என்கிற ஆசையில் ரசிகர்கள் கூட்டம் கூடி இருந்தது.  இந்த நிலையில் விஜய் சென்ற கார், கூட்டத்தில் சிக்கி  நொறுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது . அதில் அந்த காரின் கதவுகள் கூட்ட நெரிசலில் சிக்கி நெளிந்து உள்ளன. அதேபோல் கார் கண்ணாடியும் உடைக்கட்டு இருக்கிறது. தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here