தரமான சம்பவங்களுடன் வெளியான தளபதி 67 அப்டேட்.., படக்குழுவினர் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு!!

0
தரமான சம்பவங்களுடன் வெளியான தளபதி 67 அப்டேட்.., படக்குழுவினர் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு!!
தரமான சம்பவங்களுடன் வெளியான தளபதி 67 அப்டேட்.., படக்குழுவினர் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் தளபதி 67 படத்தை குறித்து இணையத்தில் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

தளபதி 67 திரைப்படம்:

தற்போதைய சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய். இப்பொழுது இவர் நடித்த வாரிசு திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் வெளியாவதற்கு முன்பே லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 67 அப்டேட் குறித்து தான் சோசியல் மீடியாவில் பரவலாக பேசப்பட்டு வந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இருப்பினும் லோகேஷ் வாரிசு ரிலீசுக்கு பிறகு தளபதி 67 அப்டேட் தருகிறேன் என்று கூறிய நிலையில், சமீபத்தில் ஒரு கல்லூரி விழாவில் வருகிற பிப்ரவரி மாதம் 1,2,3 நாட்களில் அப்டேட் வெளியாகும் என்று கூறினார். அந்த நிமிடத்தில் இருந்து தற்போது வரை ரசிகர்கள் ஆவலோடு காத்து கொண்டிருக்கின்றனர்.

சந்திரமுகி 2 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.., முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கங்கனா ரனாவத்!!

மேலும் படத்தின் ப்ரோமோ வீடியோ தான் வெளியாக போகிறது என்று இணையத்தில் சில நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இதுவரை சோசியல் மீடியாவில் தலைகாட்டாமல் படத்தில் பிசியாக இருந்து வந்த லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு சோசியல் மீடியாவில் தலை காட்டியுள்ளார். படத்தில் Cast விவரத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ வெளியிட்டுள்ளது.

அதாவது செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிக்கும் இப்படத்தில் நான்காவது முறையாக அனிருத் லோகேஷ் உடன் கைகோர்த்துள்ளார். மாஸ்டர் பட நடன மாஸ்டர் தினேஷ் கமிட்டாகியுள்ளார். அதுமட்டுமின்றி லோகேஷ் கனகராஜ், ரத்னா குமார் மற்றும் தீ ராஜ் ஆகியோர் வசனம் ஏழுதியுள்ளனர். இதனை தொடர்ந்து தளபதி 67 குறித்து அடுத்தடுத்து அப்டேட் காத்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தளபதி 67 குறித்து முக்கிய அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here