சந்திரமுகி 2 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.., முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கங்கனா ரனாவத்!!

0
சந்திரமுகி 2 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.., முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கங்கனா ரனாவத்!!
சந்திரமுகி 2 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.., முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கங்கனா ரனாவத்!!

ராகவா லாரன்ஸ் மற்றும் கங்கனா நடித்து வரும் சந்திரமுகி பார்ட் 2 படத்தை குறித்து முக்கிய அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

நடிகை கங்கனா:

பாலிவுட் திரையுலகில் பல ஹிட் படங்களை கொடுத்து தற்போது முன்னணி நடிகையாக கொக்கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை கங்கனா ரனாவத். இவர் கடந்த 2006ம் ஆண்டு வெளியான கேங்ஸ்டர் திரைப்படம் மூலம் சினிமா துறையில் என்ட்ரி கொடுத்தார். மேலும் தமிழில் ஜெயம் ரவியுடன் தாம் தூம் படத்தில் நாயகியாக நடித்தார். அதனை தொடர்ந்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கேரக்டரில் தலைவி என்ற படத்தில் நடித்து பட்டையை கிளப்பினார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதேபோல் தற்போது இந்திரா காந்தி கேரக்டரில் எமர்ஜென்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் P வாசு இயக்கத்தில் ரஜினி நடித்த சந்திரமுகி திரைப்படத்தின் பார்ட் 2 வில் ராகவா லாரன்ஸ் மற்றும் கங்கனா நடித்து வருகிறார்கள். இந்நிலையில் இப்படத்தை குறித்து சந்திரமுகியாக நடித்து வரும் கங்கனா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

மதுரையில் மெட்ரோ ரயில் சேவை., 3 ஆண்டுக்குள் முடிக்க திட்டம்! எந்தப் பகுதியில் தெரியுமா?

அதாவது நான் நடித்து வரும் சந்திரமுகி பார்ட் 2 வில் கோல்டன் குளோப் விருதை பெற்ற கீரவாணி இசையில் உருவான இறுதி பாடலுக்காக, டான்ஸ் மாஸ்டர் கலா அவர்களிடம் நடன பயிற்சி எடுத்து வருகிறேன். மேலும் P வாசு படத்தில் நடிப்பதில் பெருமையாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here