விஜய் சேதுபதியை சீரியலுக்கு தட்டி தூக்கிய ஜீ தமிழ்.., கடைசில இங்க வந்து நிறுத்திடீங்களே!!

0
விஜய் சேதுபதியை சீரியலுக்கு தட்டி தூக்கிய ஜீ தமிழ்.., கடைசில இங்க வந்து நிறுத்திடீங்களே!!
விஜய் சேதுபதியை சீரியலுக்கு தட்டி தூக்கிய ஜீ தமிழ்.., கடைசில இங்க வந்து நிறுத்திடீங்களே!!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சீரியலில் நடிக்க இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

மக்கள் செல்வன்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அச்சு அசராமல் நடிக்கும் கமலுக்கு அடுத்து இருப்பவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. தற்போது ஹீரோவில் இருந்து வில்லன் அவதாரம் எடுத்து தொடர்ந்து வெற்றிப்படங்களில் நடித்து வருகிறார். இவர் வில்லனாக நடித்த மாஸ்டர், விக்ரம், விக்ரம் வேதா போன்ற படங்கள் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. தற்போது அட்லீ இயக்கும் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்த நிலையில் மீண்டும் விஜய் சேதுபதி நடித்துள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஜீ தமிழ் சேனலில் நினைத்தாலே இனிக்கும் சீரியல் மக்களை அதிகம் கவர்ந்து வருகிறது. தற்போது இந்த சீரியலில் ஹீரோ சித்தார்த்தின் மனைவி பொம்மிக்கு விபத்து ஏற்பட்டுள்ளதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு சிகிச்சை அளிக்க அரிய வகை ரத்தம் தேவைப்படுவது போலவும், அதற்காக சித்தார்த் அலைவது போலவும் புரோமோ காட்சிகள் காட்டப்பட்டு வருகிறது.

விஜய், சன்டிவி பிரபலங்களை வலச்சுப்போட்ட ஜீ தமிழ்.., இது என்னடா பக்கா மாஸ்டர் பிளான் ஆ இருக்கே!!!!

இதனை தொடர்ந்து தனது மனைவிக்கு இந்த வகை ரத்தத்தை சார்ந்த blood donor வேண்டும் என சித்தார்த் சோசியல் மீடியாவில் வீடியோ பதிவிட்டிருந்தார். இதை பார்த்து மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதி, தனது ரசிகர் நற்பணி மன்றம் மூலமாக பொம்மிக்கு blood donor ஐ ஏற்பாடு செய்வது போலவும் இனி வரும் காட்சிகளில் காட்டப்படலாம் என சொல்லப்படுகிறது. நடிகர் விஜய் சேதுபதி தனது திரைப்பயணத்தை சின்னத்திரையில் தான் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here