விஜய், சன்டிவி பிரபலங்களை வலச்சுப்போட்ட ஜீ தமிழ்.., இது என்னடா பக்கா மாஸ்டர் பிளான் ஆ இருக்கே!!!!

0
விஜய், சன்டிவி பிரபலங்களை வலச்சுப்போட்ட ஜீ தமிழ்.., இது என்னடா பக்கா மாஸ்டர் பிளான் ஆ இருக்கே!!!!
விஜய், சன்டிவி பிரபலங்களை வலச்சுப்போட்ட ஜீ தமிழ்.., இது என்னடா பக்கா மாஸ்டர் பிளான் ஆ இருக்கே!!!!

தமிழ் தொலைக்காட்சியில் ரசிகர்களின் வரவேற்பு பெற்று டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் நோக்கத்தில் முக்கிய சேனல்களான சன், ஜீ தமிழ், விஜய் ஆகிய தொலைக்காட்சிகள் தங்களின் புது சீரியல்களை போட்டி போட்டு ஒவ்வொன்றாக டிவியில் களம் இறக்கி வருகின்றனர்.அந்த வகையில் ஜீ தமிழ் தற்போது பல முக்கிய பிரபலங்களை கொண்டு மிகப்பெரிய ப்ரைம் டைம் சீரியல் உருவாகி வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் இந்த சீரியல் குறித்து சில தகவல்கள் அவ்வப்போது சோசியல் மீடியாவில் பரவி வந்த நிலையில் தற்போது இதன் ப்ரோமோ சூட்டிங் எடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஏகப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த சீரியலில் ”சீதா ராமன்” என்ற பெயரில் விஜய் டிவி பிரபலம் ஜெய் டிசோசா ஹீரோவாக நடிக்க உள்ளார்.

வெறியுடன் திரியும் காதம்பரி., கடைசி நிமிஷத்தில் மல்லிகாவை காப்பாற்றிய சக்தி., மிரட்டும் மௌனராகம் ப்ரோமோ!!

இவருக்கு ஜோடியாக ரோஜா சீரியல் பிரபலம் பிரியங்கா நல்காரி நடிக்கிறார். இதுபோக ”கண்ணான கண்ணே” சீரியல் அக்ஷிதா முக்கிய கதாபாத்திரத்தில் களமிறங்க உள்ளார். இது தவிர ஏகப்பட்ட முக்கிய பிரபலங்களும் இந்த சீரியலில் நடிக்க உள்ளதால் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. இந்நிலையில் இந்த சீரியல் வரும் மாதத்திற்குள் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here