“வாழ்க தமிழ்நாடு” – ஆவேசத்துடன் முழக்கமிட்ட ஆளுநர்! என்ன இப்படி டோட்டலா மாறிட்டீங்க!!

0
"வாழ்க தமிழ்நாடு" - ஆவேசத்துடன் முழக்கமிட்ட ஆளுநர்! என்ன இப்படி டோட்டலா மாறிட்டீங்க!!

சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த அரசு விழாவில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என் ரவி, தனது உரையில் வாழ்க தமிழ்நாடு என முழக்கமிட்டு உள்ளார்.

ஆளுநர் முழக்கம்:

சட்டப்பேரவையில் அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே நடந்த வார்த்தை மோதலால், ஆளுநர் பாதியிலே வெளிநடப்பு செய்தார். அதுமட்டுமில்லாமல், தமிழகம் என்பதுதான் சரியான வார்த்தையாக இருக்கும் என்றும், இனி எப்போதும் தான் இப்படியே குறிப்பிடுவேன் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய இந்த நிகழ்வுகள், தொடர்ந்து பல விமர்சனங்களை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில், அரசுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாக கூறி திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் தொடர்ந்து ஆளுநருக்கு எதிரான தன் நிலைப்பாட்டை பதிவு செய்து வருகிறது.

பெண்களின் வாழ்கை இது மட்டும் தானா?? ஆணாதிக்கத்தை சுட்டிக்காட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்!!!

இந்த நிலையில் சமீப நாட்களாக, ஆர் என் ரவி தனது நிலைப்பாட்டை மாற்றி, தமிழ்நாடு என குறிப்பிட்டு வருகிறார். அந்த வகையில் சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த தேசிய வாக்காளர் தின விழாவில் பேசிய இவர், தனது உரையின் கடைசியில் “வாழ்க தமிழ்நாடு” என குறிப்பிட்டு உரையை முடித்தார். ஆளுநரின் இந்த திடீர் மன மாற்றம், அரசியல் வட்டாரத்தினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here