என்னோட Health Condition இதான்.., விஜய் ஆண்டனி டுவிட்டரில் பதிவு!!

0
என்னோட Health Condition இதான்.., விஜய் ஆண்டனி டுவிட்டரில் பதிவு!!
என்னோட Health Condition இதான்.., விஜய் ஆண்டனி டுவிட்டரில் பதிவு!!

நடிகர் விஜய் ஆண்டனி தனது உடல் நலம் குறித்து டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

நடிகர் விஜய் ஆண்டனி :

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர், பாடகர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டு ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய் ஆண்டனி . தற்போது அவரின் சினிமா கேரியரை தூக்கி விட்ட திரைப்படமான பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்றது. அப்போது எதிர்பாராத விதமாக விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதனால் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த விஜய் ஆண்டனிக்கு முகத்தில் அறுவை சிகிச்சை நடைபெற்று சென்னையில் உள்ள தனது வீட்டில் ஓய்வு பெற்று வருகிறார். மேலும் சமூக வலைத்தளங்களில் அவர் உடல்நலம் குறித்து பொய்யான வதந்திகள் பரவி வந்த நிலையில், இயக்குனர் சுசீந்திரன் அவர்களின் வாயை அடைக்க விஜய் ஆண்டனி உடல்நிலை குறித்து பேசியிருந்தார். இந்த நிலையில் விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் உடல்நலம் குறித்து ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

பிரபுதேவாவுக்காக நயன் இதெல்லாம் செஞ்சாரா? பல ஆண்டுக்கு பின் வெளிவந்த ஷாக்கிங் சீக்ரெட்ஸ் !!

அதவாது என் அன்பு நெஞ்சங்களே மலேசியாவில் நடந்த பிச்சைக்காரன் 2 ஷூட்டிங்கில் எனக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. தற்போது அதில் இருந்து நான் முழுவதுமாக மீண்டு வந்துவிட்டேன். மேலும் என் முகத்தில் பெரிய அறுவை சிகிச்சை முடிந்துள்ளது . கூடிய விரைவில் உங்கள் அனைவருடனும் நான் பேசுவேன். மேலும் எனது உடல்நிலை மேல் உங்களுக்கு இருக்கும் அக்கரைக்கு என்னுடைய நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here