சுவைக்கே சுவையூட்டும் சிக்கன் கீமா.., சண்டே உங்க வீட்ல செஞ்சு அசத்துங்க!!!

0
சுவைக்கே சுவையூட்டும் சிக்கன் கீமா.., சண்டே உங்க வீட்ல செஞ்சு அசத்துங்க!!!
சுவைக்கே சுவையூட்டும் சிக்கன் கீமா.., சண்டே உங்க வீட்ல செஞ்சு அசத்துங்க!!!

அனைவருக்கும் பிரியமான சிக்கனை வைத்து இந்த சண்டே கொஞ்ச வித்தியாசமாக கைமா சிக்கன் இத ரெசிபியை சமைத்து பாருங்க. உங்க வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்

 • சிக்கன் – 1/2 கிலோ
 • பச்சை மிளகாய் – 4
 • மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
 • மல்லி தூள் – 2 டீஸ்பூன்
 • தயிர் – 1 கப்
 • கொத்தமல்லி இலைகள் – சிறிதளவு
 • எண்ணெய் – தேவையான அளவு
 • பட்டை, கிராம், ஏலக்காய் – சிறிதளவு
 • சின்ன வெங்காயம் – 50 கிராம்
 • தக்காளி – 2
 • இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

செய்முறை விளக்கம்

கைமா சிக்கன் ரெசிபி சமைப்பதற்கு நாம் சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி ஒரு பவுலில் போட்டு கொள்ளவும். இப்போது ஒரு கடாயை எடுத்து அதை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம், ஏலக்காய் போட்டு நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தையும் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

மேலும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், தக்காளி சேர்த்து வதக்கி பின் மிளகாய் தூள், மல்லி தூள் தயிர் சேர்த்து கிளறி விடவும். அதன் பிறகு சிக்கனை சேர்த்து கிண்டி விட்டு மூடி போட்டு மூடவும். ஒரு 15 நிமிடங்களுக்கு பிறகு அதில் சிறிதளவு கொத்தமல்லி போட்டு அடுப்பை ஆப் செய்யவும். இப்பொழுது நமக்கு சுவையான சிக்கன் கைமா ரெசிபி ரெடியாகிவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here